CINEMA
என்னது, ‘M. குமரன் s/o மகாலட்சுமி’ படத்துல முதல்ல நடிக்க இருந்தது தனுஷா..? இணையத்தில் வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன..?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி . இவர் நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும் ,சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, தனி ஒருவன், டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அகிலன், சைரன், இறைவன் போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் ‘M. குமரன் s/o மகாலட்சுமி’.
தற்பொழுது இத்திரைப்படத்தை பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், நதியா, விவேக், அசின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
குறிப்பாக இவர் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘நீயே நீயே’ என்ற அம்மா பாடல் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. தற்பொழுது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.