சிவகாசி பட்டாசு ஆலை விபத்து…. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு CM விஜய் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!

By Nanthini on ஆவணி 14, 2026

Spread the love

சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில், வேதிப்பொருட்களைக் கலப்பதற்காகப் புதிதாக வாங்கப்பட்ட இயந்திரத்தைச் பரிசோதித்துப் பார்த்தபோது எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்தச் சோகச் சம்பவத்தில் பொறியாளர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், அவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.