விஜய்யின் செஸ் போர்டில் விழப்போகும் அடுத்த விக்கெட்… நள்ளிரவில் பறந்த உத்தரவு.. கே.என்.நேருவுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து…!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. விஜய் தலைமையிலான புதிய தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு எடுக்கப்பட்டுள்ள இந்த முதல் பெரிய சட்ட நடவடிக்கை, திமுக வட்டாரங்களை முழுமையாக உலுக்கியுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட சுமார் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் பல கோடி ரூபாய் ‘வேலைக்கு லஞ்சம்’ பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தின் மிக முக்கிய அரசியல் திருப்பமாக, திமுகவின் அடுத்தகட்ட தலைமையாகப் பார்க்கப்படும் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் பெயரும் இந்த FIR-ல் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய் அரசு நேரடியாக உதயநிதி ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இது வெறும் சாதாரண ஊழல் வழக்கு மட்டுமல்லாமல், திமுகவின் இளம் தலைமை வரிசையை அரசியல் ரீதியாகக் குறிவைத்து நகர்த்தப்படும் ஒரு முக்கிய காய் என விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் மத்திய அமலாக்கத்துறை கே.என்.நேருவின் இல்லங்களில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாகவும், ஒட்டுமொத்தமாக சுமார் 634 கோடி ரூபாய் அளவுக்கு இதில் ஊழல் நடந்திருக்கலாம் எனவும் அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளது. இந்த ஆவண ஆதாரங்களுடன் மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்ட புகாரின் தொடர்ச்சியாகவே தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்தகட்டமாக அமலாக்கத்துறை PMLA சட்டத்தின் கீழ் விசாரணையை தீவிரப்படுத்தி கைது மற்றும் சொத்து பறிமுதல் நடவடிக்கைகளில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளையில், இந்த FIR-க்கு எதிராக கே.என்.நேரு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூன் 23 ஆம் தேதி வரை இந்த விவகாரத்தில் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தற்காலிகமானது என்பதால், நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகே இந்த வழக்கின் இறுதிப் போக்கு தெரியவரும். புதிய அரசின் இந்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வரும் வேளையில், திமுக தரப்போ இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கடுமையாக விமர்சித்து வருகிறது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago