10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

By Muthu Mani on சித்திரை 16, 2026

Spread the love

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட் மற்றும் நர்சிங் ஆபிசர் உள்ளிட்ட 87 வகையான பிரிவுகளில் மொத்தம் 3,003 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி பணியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்; 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். 18 முதல் 35 வயது வரையுள்ள விண்ணப்பதாரர்கள், இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in/ வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு 100 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதேசமயம் எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் மே 4, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகளுக்கும் இளைஞர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.