ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை மட்டுமே… தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய செய்தி..!!

By Soundarya on ஆனி 20, 2025

Spread the love

ரேஷன் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 2.21 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் அட்டை தகுந்த அதிகாரியின் மூலம் பொதுவிநியோக முறைக்காக மாநில அரசால் வழங்கப்படுகிறது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு உணவுச் சீட்டாகவும், பிற அரசு திட்டங்களில் பங்கேற்க அடையாள அட்டையாகவும் பயனபடுகிறது. ரேஷன் அட்டை இருந்தால் தான் மாதந்தோறும் கடைகளில் பருப்பு, சீனி, பிராமியில், அரிசி ஆகிய பொருட்களை பெற முடியும்.

ரேஷன் பொருட்களை பெறுவதற்கு கைரேகை பதிவு அவசியம். இந்நிலையில் ரேஷன் கடைகளில், மத்திய அரசின் திட்டத்தின்கீழ் பொருள் வாங்கும்போது ஒரு முறையும், மாநில அரசின் திட்டத்தின்கீழ் பொருள் வாங்கும் போது ஒருமுறையும் என தனித்தனியாக கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டியது இருந்தது. இதனால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண இயந்திரத்தில், ஒருமுறை மட்டும் கைரேகையை பதிவு செய்யும் வகையில் அரசு மாற்றம் ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை மட்டும் செய்துள்ளது.