செயற்கை முறையில் மாம்பழம் பழுக்க வைத்தால்… ரூ. 5,000 அபராதம், கடை உரிமம் ரத்து… தமிழக அரசு எச்சரிக்கை..!!

By Soundarya on சித்திரை 29, 2026

Spread the love

தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், ரசாயனம் மற்றும் செயற்கை முறைகளைப் பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைக்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு விதிமீறல்களில் ஈடுபடும் கடைகளுக்கு ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அத்தோடு அந்தக் கடையின் உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மாம்பழ வியாபாரிகளிடையே பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.