தமிழக பட்ஜெட்: தகுதியுள்ள மகளிருக்கு ரூ.2,500 நிதியுதவி திட்டம் உறுதியானது..!!

By Soundarya on வைகாசி 16, 2026

Spread the love

தமிழக பட்ஜெட்டில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை செப்டம்பர் அல்லது நவம்பர் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைகளில், அரசு ஊழியர் மற்றும் வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து, தகுதியான ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதியுதவி நேரடியாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தை முறைப்படுத்த கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புதிய உயர்வுத் தொகை நடைமுறைக்கு வரும் வரை, தற்போதுள்ள மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1,000 தடையின்றித் தொடரும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்