நிதி ஆலோசகரும் ‘Finance With Harish’ யூடியூப் பக்கத்தின் நிறுவனருமான 27 வயது வி.ஹரீஷின் தற்கொலை வழக்கு தற்போது தமிழகத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு வாடகை வில்லாவில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இணைய உலகையே உலுக்கியுள்ளது. ஆரம்பத்தில் இது வெறும் உரிமம் தொடர்பான யூடியூப் மோதலாகக் கருதப்பட்ட நிலையில், ஹரீஷின் தந்தை ஜே.வினாயகம் அளித்த புகார் வழக்கின் திசையை முற்றிலுமாக மாற்றியுள்ளது.
ஹரீஷ் நிதி ஆலோசனை வழங்குவதற்கு உரிய உரிமம் பெறவில்லை என்பதை ஆயுதமாகப் பயன்படுத்தி, அவரைச் சிலர் திட்டமிட்டு குறிவைத்துள்ளனர். ஹரீஷின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிடாமல் இருக்கவும், அவரது சமூக வலைதளப் பக்கங்களை முடக்காமல் இருக்கவும் அவரிடம் இருந்து 3 கோடி ரூபாய் கேட்டு பேரம் பேசி மிரட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பணத்தைக் கொடுக்க மறுத்ததால், அவரது 5 ஆண்டுகால உழைப்பில் உருவான 13 லட்சம் ஃபாலோயர்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களை நெட்வொர்க் மூலம் மாஸ் ரிப்போர்ட் செய்து முடக்கியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஹரீஷைத் தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்ட யூடியூபர் ஜேசன் சாமுவேலைக் கானத்தூர் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். சைபர் கிரைம் அதிகாரிகளின் உதவியுடன் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஹரீஷிடம் 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டப்பட்டதா, பக்கங்களை முடக்கிய பின்னணி என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, ஜேசன் சாமுவேல் தரப்பில் தன் மீதான குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே உரிய உரிமம் இல்லாமல் நிதி ஆலோசனை வழங்கியதை அம்பலப்படுத்தியதாகவும், தான் யாரையும் மிரட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், வெறும் விழிப்புணர்வு என்ற எல்லையைத் தாண்டி, நிதி இன்ப்ளூயன்சர்கள் மத்தியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ரகசிய பேரங்களும் மிரட்டல்களும் நடந்ததா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஹரீஷின் செல்போன், லேப்டாப் மற்றும் டிஜிட்டல் சான்றுகளைக் கைப்பற்றி போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் பண மிரட்டல் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் விழிப்புணர்வு முகமூடி அணிந்து கொண்டு தனிநபர்களை முடக்கும் இது போன்ற செயல்கள், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இன்ப்ளூயன்சர் உலகிற்கும் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக மாறியுள்ளது.
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…
ஆளுங்கட்சியின் நிர்வாக திறனின்மையை மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் மீது வீண் பழிகளைச் சுமத்துவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.…