“ஹலோ… நீங்க கத்துனா… நானும் கத்துவேன்… என்ன கேலி பண்றீங்களா?… நிதியமைச்சர் மரியவில்சன் கொந்தளிப்பு… சட்டசபையில் பரபரப்பு…!”

By Swetha on ஆவணி 10, 2026

Spread the love

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, நிதியமைச்சர் மரியவில்சனின் தமிழ் உச்சரிப்பு மற்றும் இலக்கணப் பிழைகள் குறித்து மதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் விமர்சித்தார். நிதியமைச்சரின் ஆங்கிலப் பேச்சு நேர்த்தியாக இருந்தாலும், தமிழில் சில இலக்கணப் பிழைகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் பட்ஜெட் வாசிக்கும் போது பள்ளிக்கல்வித் துறை மூலம் உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், எம்.எல்.ஏ ‘பட்ஜெட்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பதிலாக ‘நிதிநிலை அறிக்கை’ எனப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு இயல்பான தமிழ் வழக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைவரும் இயல்பான தமிழிலேயே பேசுவதாகவும், நிதியமைச்சரின் பேச்சைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் ஆதரவாகப் பேசினார்.

   

ஆனால், இந்த விமர்சனங்களால் கடும் கோபமடைந்த நிதியமைச்சர் மரியவில்சன், தாம் பல தசாப்தங்களாகக் கல்வித்துறையில் ஆங்கில வழியிலேயே பணியாற்றியதாகக் குறிப்பிட்டார். மாமன்றத்தில் உருவக்கேலி, சாதி, பாலினத்தைத் தொடர்ந்து தற்போது மொழியையும் கேலி செய்யத் தொடங்கிவிட்டதாகச் சாடிய அவர், “இதுவே எனது தனித்துவமான ஸ்டைல்; உங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது, எனது தமிழை கேலி செய்கிறீர்களா?” எனத் காட்டமாகப் பதிலளித்தார்.