“விஜய் ரூட்டே தனி… நாமும் அதே ரூட்”… தவெக பாணியிலேயே திமுகவின் அதிரடி மூவ்…. ஸ்டாலின் இறக்கிய கடைசி நேர அணுகுண்டு…!

By Nanthini on புரட்டாதி 30, 2026

Spread the love

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த பொதுத்தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் இறுதிக்கட்ட பிரசார புயலே அக்கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என திமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, அதே பாணியிலான ‘கடைசி நேர அதிரடி பிரசாரம்’ என்ற உத்தியை அறிவாலயம் தற்போது கையில் எடுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி தருணத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதன் மூலம் வாக்காளர்களின் மனநிலையை நேரடியாக தங்கள் பக்கம் திருப்ப முடியும் என திமுக மூத்த நிர்வாகிகள் வியூகம் அமைத்துள்ளனர்.

இந்த உத்தியின்படி, தாராபுரத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்குப் போட்டியாக அதே பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் களத்திலேயே உடனுக்குடன் பதிலடி கொடுத்து, பிரச்சாரத்தின் கடைசி நிமிட அலையைத் தங்கள் பக்கம் திருப்பும் இந்த புதிய அரசியல் வியூகம் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.