Connect with us

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் மாஸ் நடிகர்களின் படங்கள்… எல்லாரும் ரெடியா இருங்கப்பா..!!

CINEMA

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் மாஸ் நடிகர்களின் படங்கள்… எல்லாரும் ரெடியா இருங்கப்பா..!!

 

தீபாவளி பொங்கல் என்றாலே முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4 புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளிக்கு எத்தனை படங்கள் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்பது கூடிய விரைவில் தெரியவரும். இப்போது வந்த தகவலின் அடிப்படையில் தீபாவளியை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Fcinema%2Ftamil-cinema%2F1062335-kanguva-first-look-poster.html&psig=AOvVaw2-YmSAlcCr2cduwVLyvs6c&ust=1717858187575000&source=images&cd=vfe&opi=89978449&ved=0CBEQjRxqFwoTCLiOkO7eyYYDFQAAAAAdAAAAABAD

   

கடந்த வருடமே விடாமுயற்சி படம் குறித்த தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்த சிக்கல்கள் காரணமாக ஷூட்டிங் தள்ளி போனது. அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. மாபெரும் பொருட் செலவில் கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் ரிலீஸ் ஆகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விடாமுயற்சி படத்தின் அப்டேட்.. 13 வருடங்களுக்கு அஜித் செய்யப்போகும் விஷயம்

அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐசி படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக கவின் நடித்துள்ள கிஸ் படத்தையும் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேற்கூறிய படங்களில் அஜித்தின் விடாமுயற்சி படமும் சூர்யாவின் கங்குவா படமும் மாஸ் நடிகர்களின் படங்கள். இதனால் அனைத்து தியேட்டர்களிலும் இந்த இரண்டு படங்கள் ஹவுஸ்புல் ஆகிவிடும்.

LIC Film: மீண்டும் தரமான சம்பவத்துக்கு ரெடியான குட்நைட் பிரதீப்...விக்னேஷ்  சிவன் கொடுத்த அறிவிப்பு!

இதனால் எல்ஐசி படத்தையும் கிஸ் படத்தையும் தீபாவளிக்கு முன்னரோ அல்லது தீபாவளி முடிந்தோ ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால் ஒரே நேரத்தில் விடாமுயற்சி, கங்குவா படங்களுடன் இணைந்து எல்ஐசி, கிஸ் ஆகிய படங்களை ரிலீஸ் செய்வார்களா? கடைசி நேரத்தில் பின் வாங்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னும் தீபாவளிக்கு ஐந்து மாதங்கள் இருப்பதால் மேற்கொண்டு எத்தனை படங்கள் இந்த லிஸ்டில் இணையும் என்பது இனிமேல் தான் தெரியவரும்.

கவின் அடுத்த படத்தின் நாயகி சிவகார்த்திகேயன் பட நடிகையா? - தமிழ் News -  IndiaGlitz.com

author avatar
Priya Ram
Continue Reading
To Top