இயக்குனரும், நடிகருமான சுந்தர்சி என்று தன்னுடைய 57 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் அவர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் .

சுந்தர்சி இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் கேங்கர்ஸ். அவ்னி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக குஷ்பூ தயாரித்துள்ளார். இந்த படத்தை சுந்தர் சி இயக்குவதோடு மட்டுமின்றி நடிகராகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இந்த படம் இந்த வருடம் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து அதில் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதனை சுந்தர் சி இயக்கம் உள்ளார். இந்த படத்தை வேல் ஃபிலிம் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்ற வருகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் கலகலப்பு. அதன் முதல் பாகம் 2012 ஆம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வரவேற்பு பெற்ற நிலையில் மூன்றாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் விமல், மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க உள்ளார்கள் .இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட்ட உள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான படம் அரண்மனை சீரிஸ். இதுவரை நான்கு பாகங்கள் வெளிவந்துள்ளது. அதில் கடந்த வருடம் வெளிவந்த அரண்மனை படத்தில் நான்காம் பாகம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து ஹிட் அடித்தது. இதனை எடுத்து ஐந்தாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் சுந்தர் சி இரங்கி உள்ளார். இந்த படமும் விரைவில் உருவாக உள்ளது.
