பிரபல நடிகரான தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து ராயன் தனுஷ் நடிப்பில் உருவான குபேரா திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அடுத்ததாக தனுஷ் தனது 52 ஆவது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் அந்த திரைப்படம் வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க தனுஷ் கமிட் ஆகியுள்ளார். அது மட்டும் இல்லாமல் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிக்க உள்ளார். அது மட்டும் இல்லாமல் பிரபல இயக்குனர்களான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனது 55-வது படத்திலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 56-வது திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.
இதற்கு இடையே தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சமீபத்தில் தான் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. கோல்டன் ஸ்பேரோ பாடலில் பிரியங்கா மோகன் டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.