அடேங்கப்பா..! இத்தனை படங்களா..? நடிகர் சூர்யா தவறவிட்ட ஹிட்டான படங்கள …!

By Soundarya on கார்த்திகை 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் சூர்யா. இவருடைய நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வரலாற்று கதை அம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சூர்யா சமீபத்தில் தான் நடிக்க மறுத்து ஹிட்டான 5 படங்கள் குறித்து பேசியுள்ளார்.

மகதீரா' வெளியாகி 10 ஆண்டுகள்: காஜல் நெகிழ்ச்சி | kajal tweets about magadheera - hindutamil.in

   

பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கியத்தில் உருவாகி கடந்த 2009ஆம் வருடம்  தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் மகதீரா. இந்த படம் தமிழில் மாவீரன்  என்று வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை ராம் சரண் ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்கள். மாபெரும் வெற்றியடைந்த இந்த படத்தில் சூர்யா நடிக்க மறுத்துள்ளார்.

   

அஜித்தின் ஆசை படம் இத்தனை வசூல் செய்ததா?.. 28 வரும் முன்பே பாக்ஸ் ஆபிஸ் சாதனை

 

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1995 -ம் வருடம் வெளியான திரைப்படம் ஆசை. இந்த படத்தில் சுவலட்சுமி, ரோகினி, பிரகாஷ் ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், வடிவேலு, நிழல்கள் ரவி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.இந்த திரைப்படம் அஜித் கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்று. இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இந்த படத்திலும் சூர்யாவிடம் நடிக்க கேட்ட நிலையில் இதிலும் நடிக்க மறுத்துள்ளார்.

துப்பாக்கி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ.. இதுவரை பலரும் பார்த்திராதது

இயக்குநர் ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. விஜய்யின்  இப்படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறினார் விஜய். இந்த படத்திலும் சூர்யாவுக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

Paiyaa

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பையா’. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திலும் நடிகர் சூர்யா நடிக்க மறுத்துள்ளார்.

Dhruva Natchathiram movie

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஸ், திவ்யதர்ஷினி என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சூர்யா தானாம். ஆனால் பல காரணங்களால் அவர் நடிக்கவில்லை. அதன் பிறகு தான் விக்ரமை வைத்து கௌதம் மேனன் இயக்கினாராம்.