மதுரையை கைப்பற்ற அன்புச்செழியன் போட்ட மாஸ்டர் பிளான்….. மகனுக்கு மேயர் பதவி…. விஜய்க்கு கொடுத்த அந்த ஒரு பரிசு…. பின்னணியில் இருக்கும் அரசியல் வியூகம்….!

By Nanthini on புரட்டாதி 30, 2026

Spread the love

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் நேற்று மதுரைக்கு வருகை தந்தார். மதுரை வந்த அவரை அமைச்சர்களான சி.டி.ஆர். நிர்மல்குமார், புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டு சென்று உற்சாகமாக வரவேற்றனர். இவர்களுடன் சேர்ந்து பிரபல சினிமா ஃபைனான்சியரான அன்புச்செழியன், தனது மகன் விவேக்குடன் வருகை தந்து விஜய்க்கு மீனாட்சியம்மன் சிலையை பரிசாக வழங்கி வரவேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிமுக ஆதரவாளராக அறியப்பட்ட அன்புச்செழியன் திடீரெனத் தவெக பக்கம் நகர்வது குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. சினிமா ஃபைனான்ஸ் தொழிலில் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் விஜய்யைச் சந்தித்ததாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே தனது மகன் விவேக்கை தவெக மூலம் அரசியலில் களமிறக்க அன்புச்செழியன் திட்டமிட்டிருந்ததாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மதுரை தெற்கு தொகுதியில் விவேக்கை வேட்பாளராக நிறுத்த தவெக தலைமையும் பச்சைக்கொடி காட்டியிருந்தது. ஆனால், வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, திமுக தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று அன்புச்செழியன் தன் மகனைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க வைத்தார். இதன்பின் விஜய்யைச் சந்திக்கப் பலமுறை முயன்றும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது அமைச்சர்கள் மற்றும் தனிச் செயலாளரின் உதவியுடன் இந்தச் சந்திப்பு சாத்தியமாகியுள்ளது.

   

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைத் தவறவிட்ட விவேக், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது உள்ளாட்சித் தேர்தலில் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்ய விரும்புகிறார். குறிப்பாக, மதுரை மாநகராட்சி மேயர் பதவியை தன் மகனுக்குப் பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே அன்புச்செழியன் தவெக தலைமைக்கு நெருக்கமாகக் காய் நகர்த்தி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.