இந்த வருடம் தல தீபாவளியை கொண்டாடும் சினிமாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் யாரென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

#image_title
இசையமைப்பாளர், பாடகர் , நடிகர் என்று பல பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம்ஜி. இவர் சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த வங்கி ஊழியரான இந்து என்பவரை திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர் இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடுகிறார்.

#image_title
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி காதலித்து வந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோவில் ஒன்றில் செப்டம்பர் 16ஆம் தேதி பாரம்பரிய முறையில் திருமணம் முடித்துள்ளனர். இவர்களும் இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

#image_title
ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை கடந்த வருடம் டிசம்பரில் ஐஸ்வர்யாவவை திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடுகிறார்.

#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோபோ சங்கர் . கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவருடைய மகள் இந்திராவின் திருமணம் நடந்தது. மாமா முறை கொண்ட கார்த்திக் என்பவரோடு தான் இந்திரஜாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களும் இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

#image_title
வரலட்சுமி சரத்குமார் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தாலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி என்ற திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் சசிகுமாருடன் நடித்திருந்தார். இவர் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். கடந்த ஆகஸ்ட் மாதம் வரலட்சுமி பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

#image_title
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கும் இந்த ஆண்டு தலை தீபாவளி தான்.
