“தலைவன் வருவார்ரு காத்திருந்தோம்” பதவியேற்பு விழா ரத்தாகிடுச்சா..? நேரு ஸ்டேடியம் முன்பு கண்ணீர் விட்டு கதறிய TVK பெண் தொண்டர்கள்..!!

By Soundarya on வைகாசி 7, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்க சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், அந்தப் பணிகள் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகச் சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மை பலம் தவெக-விடம் இல்லை என்பதால், இந்தத் தடை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகையிலிருந்து தெளிவான அழைப்பு வராததாலும், பெரும்பான்மை குறித்த சிக்கல்கள் நீடிப்பதாலும் பதவியேற்பு விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலைக் கேட்டு விழா அரங்கிற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நீண்ட தூரத்திலிருந்து தங்கள் தலைவன் பதவியேற்பதைக் காண வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், விழா நிறுத்தம் செய்யப்பட்டதைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். நேரு உள்விளையாட்டு அரங்கம் முழுவதும் சோகமான சூழல் நிலவுவதுடன், ஆளுநரின் முடிவுக்கு எதிராகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.