ஏங்க, வாங்க வீட்டுக்கு போலாம்… வர மறுத்த கணவர்… கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தீக்குளித்த பெண் அதிகாரி… திடுக்கிடும் பின்னணி…!

By Nanthini on புரட்டாதி 24, 2025

Spread the love

மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி அருகே உள்ள கெஞ்சப்பட்டியில் வசிப்பவர் சங்கிலி முருகன் தலையாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி சோனியா 34 வயதான இவர் செங்குளத்தில் தலையாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிய நிலையில் கணவன் மனைக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சங்கிலி முருகன் வீட்டுக்கு செல்லாமல் தங்கையின் வீட்டிற்கு சென்றுள்ளார். கணவரை வீட்டுக்கு வருமாறு சோனியா கூப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 19ஆம் தேதி சோனியா குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மீண்டும் தன்னுடைய கணவனை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போதும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விபரீத முடிவு எடுத்த சோனியா தான் கொண்டு வந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக சோனியாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி சோனியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.