அடச்சீ… சீருடையை மறந்து இரவு உடையில் வீடியோ… பணம் வசூலிக்க QR கோட்?… பெண் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்… மீரட்டில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பணியாற்றி வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் அனு, இரவு உடையில் இருக்கும் ஆபாசமான மற்றும் அநாகரிகமான வீடியோவை தனது யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் பணம் செலுத்துவதற்கான QR கோட் ஒன்றையும் இணைத்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. காவல் துறையின் கட்டுப்பாடுகளையும் கண்ணியத்தையும் மீறும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்குத் தகவல் சென்றதும், காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது. காவல் துறையின் மரியாதையைக் குறைக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக, சப்-இன்ஸ்பெக்டர் அனு உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சீருடைப் பணியில் இருக்கும் ஒருவர் சமூக வலைதளங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தீவிர ஒழுங்கு நடவடிக்கைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது.

   

இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த மீரட் காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான விசாரணை அதிகாரியாக சி.ஓ சௌமியா அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார். வீடியோவை வெளியிட்டதன் பின்னணி, QR கோட் மூலம் பணம் பெறப்பட்டதா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.