பெங்களூரு மற்றும் மும்பை இடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள், பூட்டப்பட்ட கதவுகள் மற்றும் தூய்மையான கழிப்பறைகள் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்கள் தனித்து பயணிக்கும் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிப்பதாகப் பெண் பயணியொருவர் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நவம்பர் 1-ஆம் தேதி கொடியேற்றித் தொடங்கி வைக்கப்பட்ட பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் பயணம் செய்த பெண் பயணக் கலைஞர் திவ்யா சா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் உட்புறக் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். அதில், இரவு நேரப் பயணங்களை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், டிக்கெட் இல்லாதவர்கள் உள்ளே நுழைவதைத் தவிர்க்கக் கதவுகள் பூட்டப்பட்டிருக்கும் வசதி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீண்ட தூரப் பயணத்தின் இறுதிக் கட்டத்திலும் கழிப்பறைகள் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருப்பதை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
https://www.instagram.com/reel/DfNWV23qC3S/?utm_source=ig_web_copy_link&srtk=MzRlODBiNWFlZA==
இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வந்தாலும், “அரசு நவீன வசதிகளைச் செய்து கொடுத்தாலும், அதைப் பொதுமக்களாகிய நாம் நமது சொந்தப் பொருளாகப் பாவித்துச் சுத்தமாகப் பராமரிக்கும் குடிமை உணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே இந்த வசதிகள் நீண்ட காலம் நீடிக்கும்” எனத் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள முதலமைச்சர் விஜய் வீட்டின் பின்புறம், சுமார் 300 மீட்டர் தொலைவில் நடைபயிற்சி…
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கலேபூர் கிராமத்தில் நடைபெற்ற திருவிழா பொருட்காட்சியில், கடல் கன்னி போன்ற வேடமணிந்து…
அரசு அலுவலகங்களில் தங்களது பணிகள் தடையின்றி முடிவதற்காகப் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயச் சூழல் இருப்பதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் இன்றுடன் 25…
சியாட்டில் உள்ள 'லுமென் ஃபீல்டு' மைதானத்தில் சியாட்டில் சீஹாக்ஸ் மற்றும் சிகாகோ பியர்ஸ் அணிகளுக்கு இடையேயான என்.எஃப்.எல் கால்பந்து போட்டிக்கு…
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், தமிழக அரசுக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெறப்…