பிரச்சாரத்திற்கு சென்றபோது எம்ஜிஆரை அவமானப்படுத்திய பெண் அதிகாரி… ஆனா MGR சொன்னது தான் ஹைலைட்..!

By Soundarya on கார்த்திகை 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் எம்ஜிஆர். ஒரு நாடக நடிகராக இருந்த சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிறகு பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலிலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்ஜிஆருக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எம்ஜிஆரின் ஒவ்வொரு படங்களிலும் மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு கருத்து இடம் பெற்றிருக்கும்.

MGR Death Anniversary,MGR: இன்று எம்.ஜி.ஆர்., 31வது நினைவு தினம் : மக்கள் மனதில் நீங்காத மாமனிதர்! - former chief minister mg ramachandran 31st death anniversary special - Samayam Tamil

   

1936 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்ஜிஆர் தொடர்ந்து பத்து வருட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக உருவெடுத்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதுரை வீரன். எம்ஜிஆர் எப்போதுமே தலைக்கனம் இல்லாதவர். ஒருமுறை எம்ஜிஆர் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

   

அப்போது சிவகங்கை மாவட்ட மருத்துவ அதிகாரி அலுவலகம் இருந்தது. அங்கு சென்று ஓய்வெடுத்து செல்லலாம் என்று இருந்தார். அங்கு MDO ஆக இருந்த அம்மையார் மேலிடத்தின் அழுத்தம் காரணமாக எதற்கு வாந்தி மயக்கம் வருகிறது என்று கிண்டலாக கேட்டு பத்து நிமிடம் தருகிறேன் அதற்குள் உபாதையை முடித்துவிட்டு செல்லுங்கள் என்கிறார்.

 

எம்ஜிஆர் 100 | 84 - தமிழ் வளர்த்தோன்! | எம்ஜிஆர் 100 | 84 - தமிழ்  வளர்த்தோன்! - hindutamil.in

எம்ஜிஆர் உபாதையை தனித்து கொண்டு பெட்டில் கால் நீட்டி படுத்து கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டார். பத்து நிமிடம் முடிந்துவிட்டது. இடத்தை காலி பண்ண சொல்லுங்க என்று சொல்ல தொண்டர்களால் கோபத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. உடனே எம்ஜிஆர் அவர் அரசு அதிகாரி அவர் சொல்வது கடுமையாக இருக்கலாம். ஆனால் அவர் இடத்தை பயன்படுத்த எந் நியாயமும் இல்ல என்று சொல்லி கிளம்பிவிட்டாராம்.