“அவனை சும்மா விடாதீங்க… என்னால தாங்க முடியல…” வீடியோ வெளியிட்டு பெண் பொறியாளர் எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு சம்பவம்…!!!

By Devi Ramu on ஆடி 24, 2026

Spread the love

சென்னையை அடுத்த பூந்தமல்லி கரைஞ்சான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மென்பொருள் பெண் பொறியாளரான ஷாலினி, குடும்பப் தகராறு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதியிடையே தொடர்ந்து மனக்கசப்பு நிலவி வந்த சூழலில், கணவரின் கொடுமை தாங்க முடியாமல் இவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

https://www.instagram.com/reel/DbKpOzZzJAM/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==

   

தான் உயிரிழப்பதற்கு முன்பாகக் கண்ணீருடன் வீடியோ ஒன்றை பதிவுசெய்து தனது சுற்றத்தாருக்கு அனுப்பியுள்ளார். அதில், தன்னைக் கணவர் கடுமையாகச் சித்திரவதை செய்வதாகவும், அவருக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும் என்றும் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், மனைவியைத் தாக்கித் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.