மாதம் ரூ. 8 ஆயிரம் சம்பளம் வாங்கும் பெண் ஊழியர் ரூ.13 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை, வங்கி கணக்கை முடக்கிய ஜிஎஸ்டி அதிகாரிகள் – என்ன கொடும சார் இது?

Spread the love

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நாகால் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். கார் டிரைவர். இவரது மனைவி யசோதா. தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் 8 ஆயிரம் சம்பளத்தில் பணி செய்கிறார். நேற்று முன்தினம் அவரது வங்கி கணக்கில் சம்பளம் போடப்பட்டது. அந்த பணத்தை யசோதா எடுக்க முயன்ற போது அவரது வங்கி கணக்கில் போதிய பணம் இருப்பு இல்லை என தெரிய வந்தது. இதுகுறித்து வங்கிக்கு சென்று விசாரித்த போது யசோதாவின் வங்கி கணக்கில் 13 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரிப்பாக்கி இருப்பதால் அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு யசோதா அதிர்ச்சியடைந்தார். 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அவருக்கு 13 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி பாக்கி எப்படி வரும் என்று வங்கி அதிகாரிகளும் குழப்பமடைந்தனர். இதுகுறித்து சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு செல்லுமாறும் அவர்கள் அறிவுறுத்தினர். மாத சம்பளத்தையே எடுக்க முடியாத நாங்கள் எப்படி சென்னைக்கு ஜிஎஸ்டி அலுவலகத்தில் செலவு செய்து செல்ல முடியும் என்று யசோதாவும் அவரது கணவர் மகாலிங்கமும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற குளறுபடிகள் எப்படி வருகிறது என்பதை ஜிஎஸ்டி அதிகாரிகள்தான் விளக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Elango

Recent Posts

“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது?”…. மௌனம் கலைத்த அமைச்சர் நிர்மல் குமார்… பட்ஜெட்டுக்கு பின் காத்திருக்கும் ட்விஸ்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல் ஒரு வாரத்திலேயே பல்வேறு…

15 minutes ago

“1993 நரசிம்ம ராவ்… 2026 விஜய்?”… தமிழக அரசியலில் அடுத்த ‘சிபிஐ’ அணுகுண்டு… இன்பதுரை போட்ட அந்த ஒரு ட்வீட்….!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…

21 minutes ago

அதிமுகவிலிருந்து ‘அவுட்’… தவெக-வில் ‘இன்’… கோட்டையை ஆளப்போகும் அந்த 7 விக்கெட்டுகள் யார்?… ராஜ்பவனுக்கு போகும் அந்த ‘லிஸ்ட்’…!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…

25 minutes ago

BREAKING: “தமிழக அமைச்சரவையில் விஜய் செய்யும் மாஸ் சம்பவம்”… 1967-க்கு பிறகு நடக்கப்போகும் அந்த வரலாற்றுச் சம்பவம்…!

தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ்…

30 minutes ago

இனி ஒரு கீறல் கூட விழாது… CM விஜய் பார்த்து பார்த்து வாங்கிய 5050 கார்…. வாயடைக்க வைக்கும் மிரட்டலான தொழில்நுட்பம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது…

36 minutes ago

“அதிமுகவில் அடுத்த பிளவு?”…. சி.வி.சண்முகத்தின் டெல்லி ரகசிய பயணம்.. இபிஎஸ்-க்கு காத்திருக்கும் செக்… உடைத்த பகீர் உண்மை….!

தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி தற்போதைய…

41 minutes ago