“காலை நல்லா மிதி…” ஜாலியாகத் தூங்கும் பெண் ஊழியர்… மதுபாட்டில் வாங்கி வர சொல்லும் ஆசிரியர்கள்… அங்கன்வாடி மையத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 3, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சின்த்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில், அங்குப் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் தரையில் சொகுசாகப் படுத்துக்கொண்டு, சிறிய பள்ளிச் சிறுமியைத் தனது கால்களின் மீது நிற்க வைத்து அழுத்தச் சொல்லும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அப்பெண் ஊழியர் சிறுமிக்கு எங்கு அதிகம் அழுத்தம் தர வேண்டும் எனக் கட்டளையிடும் குரலும் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மட்டுமின்றி, அம்மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களைக் கொண்டு கால் மசாஜ் செய்ய வைப்பது, குழந்தைகளை மதுக்கடைக்கு அனுப்பி மதுபாட்டில்கள் வாங்கி வரச் சொல்வது என தொடர்ச்சியாகப் பல்வேறு அக்கிரமங்கள் அரங்கேறி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

   

மத்தியப் பிரதேசக் கல்விக் கூடங்களில் நடக்கும் இதுபோன்ற ஒழுங்கீன மற்றும் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாகப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது உடனடியாகக் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேச கோரிக்கை விடுத்து வருகின்றனர்.