திக்… திக்… திக்… தேசிய குத்துச்சண்டை வீராங்கனை நெடுஞ்சாலையில் சடலமாக மீட்பு… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

By Swetha on கார்த்திகை 9, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான தேசிய அளவிலான குத்துச்சண்டை வீராங்கனை மந்தஷா, கான்பூர் – பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தங்கம் வென்று விளையாட்டில் மேலும் சாதிக்க விரும்பிய இவரின் மரணம், அவரது குடும்பத்தினரிடமும் அப்பகுதியிலும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 5-ஆம் தேதி மதியம், திருமணப் பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய மந்தஷா, அதன்பின் வீடு திரும்பவில்லை. மாலை நேரத்தில் அவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து சுமார் 40-50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாராஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலையில் இரத்த வெள்ளத்தில் மந்தஷாவின் சடலம் மீட்கப்பட்டது.

   

மந்தஷாவின் மரணத்தில் அவரது காதலர் அல்லது உடற்பயிற்சி கூடத்தில் பழகிய நண்பருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவரது குடும்பத்தினர் கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், அவரது மொபைல் போன் மற்றும் சில ஆடைகள் காணாமல் போயுள்ளன. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மந்தஷாவின் மொபைல் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்து, அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.