முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கான கட்டணங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உத்தரவின்படி, விவசாயிகள் மற்றும் மட்பாண்டத் தொழிலாளர்கள் எவ்வித விலையோ அல்லது உரிமக் கட்டணமோ (Royalty) செலுத்தாமல் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், பொதுமக்கள் தங்களது சொந்த வீட்டு உபயோகத் தேவைகளுக்காகவும் இந்த வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள இந்தத்திட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தகுதியான நபர்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ e-Sevai இணையதளம் (tnesevai.tn.gov.in) வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்து உரிய அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றுவதன் மூலம், மண்ணின் வளம் விவசாயிகளுக்குக் கிடைப்பதுடன், ஏரி மற்றும் குளங்களின் நீர்க் கொள்ளளவை கணிசமாக உயர்த்தவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவியாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால்…
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…