தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் இன்று (மே 21) பதவியேற்க உள்ள நிலையில், அதில் இடம்பெறவுள்ளவர்களின் சாத்தியமான பட்டியல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல்களின்படி அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது பர்வேஸ், தாம்பரம் தொகுதி சரத்குமார், வேளச்சேரி தொகுதி குமார், ஆர்.கே. நகர் தொகுதி மரிய வில்சன், கடலூர் தொகுதி ராஜ்குமார், திருநெல்வேலி தொகுதி ஆர்.எஸ்.முருகன், குமாரபாளையம் தொகுதி விஜயலட்சுமி மற்றும் சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகிய எட்டுப் பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. [1]
புதிய அமைச்சரவை பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் துறை ஒதுக்கீடு தொடர்பான விபரங்கள் இன்னும் தவெக தலைமையால் முறைப்படி வெளியிடப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களிலும் அரசியல் தளங்களிலும் இந்த பெயர்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. நாளை நடைபெறும் அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழாவின் போதுதான் இந்த பட்டியலில் உள்ளவர்கள் யாரெல்லாம் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்படவுள்ளன என்பது போன்ற முழுமையான விபரங்கள் உறுதியாகத் தெரியவரும்.
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…