அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா… மகள் என்றும் பாராமல் கொடூரம்… 22 வயது பெண்ணை சுத்தியலால்… அடித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் பகீர் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 10, 2026

Spread the love

குஜராத்தின் சர்க்கேஜ் பகுதி அருகே, தனது ஆண் நண்பருடன் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானதால் 22 வயது பெண் ஒருவர், அவரது தந்தை மற்றும் சகோதரரால் “கௌரவக் கொலை” செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. துணித் தொழில் செய்து வரும் இவ்விருவரும், மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான அந்த வீடியோவால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தன்று, அப்பெண்ணை கேல்ஜிபுரா பகுதியிலுள்ள தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, சுத்தியலால் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். பின்னர், இக்கொலையை எவ்வித சந்தேகமும் வராதவாறு ஒரு சாதாரணச் சாலை விபத்து போலக் காட்டி தப்பிக்க நாடகமாடியுள்ளனர்.

   

இருப்பினும், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் இது விபத்து அல்ல, திட்டமிடப்பட்ட கௌரவக் கொலை என்பது அம்பலமானது. அதைத் தொடர்ந்து, குற்றத்தில் ஈடுபட்ட தந்தை மற்றும் சகோதரர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.