அடச்சீ நீயெல்லாம் ஒரு அப்பனா?….. 40 லட்சம் வரதட்சணைக்காகச் பெற்ற மகளையே குத்திய தந்தை…. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

வரதட்சணைக் கொடுமை என்றாலே கணவன் மற்றும் அவனது குடும்பத்தினரால் மணப்பெண் சந்திக்கும் சித்திரவதைகளும் தற்கொலைகளுமே நம் நினைவுக்கு வரும். இந்தியாவில் தொடர்கதையாக இருக்கும் இந்த அவலத்தின் மத்தியில், பெங்களூரில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. வரதட்சணைப் பண ஆசைக்காகப் பெற்ற மகளையே ஒரு தந்தை கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற இச்சம்பவம் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை உலுக்குவதாய் அமைந்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த நாகேந்திரா என்பவரின் மகள் துர்கா, கல்லூரியொன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் துர்காவிற்குத் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், மணமகன் வீட்டாரிடம் இருந்து ரூ.40 லட்சம் வரதட்சணையாகப் பெற நாகேந்திரா திட்டமிட்டுள்ளார். இதற்கு மணமகன் வீட்டார் சம்மதித்தாலும், பெண் கல்வியும் சுயமரியாதையும் கொண்ட துர்கா இந்த வரதட்சணை பேரத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், மணமகனிடம் “எங்கள் அப்பா கேட்கும் வரதட்சணைப் பணத்தைக் கொடுக்க வேண்டாம்” என்றும் தெளிவாகக் கூறி மறுத்துள்ளார்.

தன் பேராசைக்குத் தடைக்கல்லாக இருந்த சொந்த மகளின் மீது ஆத்திரமடைந்த நாகேந்திரா, அவர் பணியாற்றும் கல்லூரிளுக்கே நேரில் சென்றுள்ளார். மகளைப் பார்க்க வேண்டும் என்று கூறி அழைத்தவர், எதிர்பாராத விதமாகத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் துர்காவின் கழுத்து மற்றும் நெஞ்சில் பலமுறை கொடூரமாகக் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த துர்கா உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட நாகேந்திராவை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Nanthini

Recent Posts

39 பிஞ்சுக் குழந்தைகள்… பற்றி எரிந்த தீ..! 3 பச்சிளங்குழந்தைகள் பரிதாப பலி… நாட்டை உலுக்கிய கோர விபத்து…!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் திங்கட்கிழமை…

10 minutes ago

“முன்னாள் கல்லூரி நண்பன்…” அடுத்தடுத்து வந்த போட்டோ வீடியோ…. பிளாக்மெயில் செய்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

கர்நாடக மாநிலம் சிமோகாவைச் சேர்ந்த வாணி (22) என்ற இளம் பெண், பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில்…

11 minutes ago

கண்ணுக்கு கண் தண்டனை..! ஆசிட் பாட்டிலுடன் நின்ற பெண்… உலகையே அதிரவைத்த கிளைமாக்ஸ்… நீதிமன்றம் தந்த பழிவாங்கும் உரிமை…!!

2004-ஆம் ஆண்டில் ஈரானைச் சேர்ந்த அமனே பஹ்ராமி என்ற இளம் பொறியியல் பட்டதாரி, மஜித் மொவாஹெடி என்ற தனது சக…

17 minutes ago

திரும்பிப் போகவும் வழியில்லை… வாழவும் வழியில்லை..! நடுரோட்டில் தவிக்கும் இளம்பெண்ணின் கதறல்… வைரலாகும் வீடியோ பதிவு…!!

சத்தார்பூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.…

29 minutes ago

தவறு இருந்தால் FIR போடு… அடிக்க நீ யார்…? லாரி ஓட்டுநரை கைமுட்டியால் தாக்கிய ஓட்டுநர்… ரத்த வெள்ளத்தில் சரிந்த கொடூரம்…. இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா பகுதியில், போக்குவரத்துத் துறை பெண் ஆய்வாளர் பார்வதி என்பவரின் வாகன ஓட்டுநர்,…

37 minutes ago