“பாட்டி வீட்டில் காதல்…” பிடிவாதமாக இருந்த 10-ஆம் வகுப்பு மாணவி… கழுத்தை நெரித்து கொன்ற தந்தை…. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 30, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே 13 வயது மகள் தனது காதலைக் கைவிட மறுத்ததால், ஆத்திரமடைந்த தந்தை தனது சொந்த மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வானூர் அருகே உள்ள டி.பரங்கிணி கிராமத்தைச் சேர்ந்த சிவசாஸ்திரி என்பவரின் 13 வயது மகள் விகாஷினி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். முன்னதாக ராணிப்பேட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கிப் படித்தபோது, சிறுமி இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த தந்தை சிவசாஸ்திரி மகளின் காதலைக் கண்டித்து, படிப்பைத் தொடர்வதற்காக மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

   

இருப்பினும் சிறுமி தொடர்ந்து அந்த இளைஞருடன் காதலில் இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், இதனால் ஆத்திரமடைந்த சிவசாஸ்திரி தனது மகள் விகாஷினியின் கழுத்தைக் கைகளால் நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், பெத்த மகளையே கொலை செய்த தந்தை சிவசாஸ்திரியை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.