திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மது குடிக்க பணம் இல்லாததால் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே வசித்து வரும் ரவிக்குமார் என்பவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் தினமும் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் தன்னுடைய மூன்று வயது மகளை 30,000 ரூபாய்க்கு ஒரு தம்பதியினரிடம் விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக குழந்தையின் தாய் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவருடைய புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் ரவிக்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் குழந்தையை விற்பதற்கு புரோக்கராக செயல்பட்ட சாகுல் என்ற நபரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக குழந்தையை வாங்கிய தம்பதியும் கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து குழந்தையும் மீட்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…