“அப்பா நீ வந்துட்டியா”… பாசத்திற்காக ஏங்கிய மகள்களுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… காண்போரை கலங்க வைக்கும் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு தாய் தந்தையின் பாசம் முழுமையாக கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். ஏனென்றால் அவர்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாத நிலை உருவாகும்.

குழந்தைகளை பிரிந்து வாழக்கூடிய சூழலும் ஏற்படும். நாளுக்கு நாள் வளர்ந்து வரக்கூடிய நம்முடைய பொருளாதாரத்திற்கு ஏற்ப நம்முடைய உழைப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. என் நிலையில் தந்தையை பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மகள்கள் ஒரு நாள் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது வீட்டுக்குள் யாரோ இருப்பது போன்று உணர்கின்றனர். மெதுவாக தேடிக்கொண்டே உள்ளே வந்த மூத்த மகள் அப்படியே அவரின் அம்மாவின் அருகே சென்று பார்க்கின்றார்.

   

யாரும் இல்லை என்று சிறு சோகத்துடன் திரும்பும் போது வீட்டின் மூலையில் அப்பா மறைந்து நின்று கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்ததும் இரண்டு மகள்களும் தாங்க முடியாத மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். தன்னுடைய மகள்களின் ரியாக்ஷனை கண்ட அப்பாவுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. இப்படி இவர்களுக்கு இடையேயான பாசத்தை வெளிக்காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளது.