மெட்ரோ நிலையத்தில் இருந்து இறங்கிய பெண் ஒருவர், ரேபிடோ பைக்கை புக் செய்து 29 கிலோமீட்டர் தூரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆனால், செல்ல வேண்டிய இடத்திற்கு இன்னும் 1 கிலோமீட்டர் மட்டுமே இருந்த நிலையில் எதிர்பாராவிதமாக பைக் பழுதாகி நின்றுள்ளது. பைக்கை 5 நிமிடத்தில் சரி செய்துவிடுவதாக ஓட்டுநர் கெஞ்சியும் கேட்காத அந்தப் பெண், கட்டணம் எதுவும் தராமல் அங்கிருந்து கோபமாக நகர முயன்றுள்ளார்.
இதைப் பார்த்துத் தட்டிக்கேட்ட முதியவர் ஒருவரிடமும் அந்தப் பெண் கடுமையாக நடந்து கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அந்தப் பாதையில் வந்த பெண்ணின் தந்தை, நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தன் மகளின் தவறான நடந்து கொள்ளலுக்காக ரேபிடோ ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்ட தந்தை, அவருக்கு உரிய கட்டணத்தையும் வழங்கிவிட்டு மகளைக் கண்டித்து அழைத்துச் சென்றுள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்கவே நினைக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
