கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பகுதியில் முனி கிருஷ்ணா என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகின்றார். இவருக்கு சத்யா என்ற மனைவியும் இரண்டு வயதில் ஜோயல் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. அந்த குழந்தை பிறந்ததிலிருந்து உடல் நல பாதிப்புடன் இருந்ததால் முனிகிருஷ்ணா மற்றும் சத்யா இருவரும் சேர்ந்து பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளன. இதனிடையே கடந்த டிசம்பர் 22ஆம் தேதி குழந்தையின் வாயிலிருந்து நுரை வந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சத்தியா உடனே குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனிடையே குழந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டதால் தான் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக சத்யாவிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளார். அப்போது கணவன் தான் குழந்தைக்கு விஷத்தை கொடுத்தது சத்யாவுக்கு தெரியவந்தது.
குழந்தையுடன் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அதற்காக கடன் வாங்கி முனி கிருஷ்ணா மருத்துவ செலவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது 50 மில்லி விஷத்தை வாங்கி வந்து தனது குழந்தைக்கு கொடுத்துள்ளார். அதனால் குழந்தை உயிருக்கு போராடி வருவது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கணவர் மீது சத்யா போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று…
கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்யாரண்யபுரா முதன்மைச் சாலையில் இயங்கி வரும் 'மை சலூன் அண்ட் ஸ்பா' மையத்திற்குள் கடந்த அக்டோபர்…
கர்நாடக மாநிலம் மடிக்கேரி - பாகமண்டலா முதன்மைச் சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்த கார்…
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில், கணவனைப் பிரிந்து வேறொரு நபருடன் வாழச் சென்ற திருமணமான பெண் ஒருவர் மீது, 'புனிதப்படுத்தும்…
பெட்ரோல் பங்க்கிற்கு காரில் வந்த பெண் ஒருவர், டீசல் போடுவதற்காகக் காரை நிறுத்திவிட்டு, போனில் பேசுவது போல நடித்துக் காரை…
மின்சாரக் கம்பியை இணைத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நீரில் மின்சாரம் பாய்ந்ததில் அனுராக் யாதவ் எனும் வாலிபர் பரிதாபமாக…