திருவண்ணாமலையை எடுத்த மங்களம் அருகே உள்ள ஆர்ப்பாட்டத்தை சேர்ந்தவர் தான் ஏழுமலை என்பவர். பெங்களூரில் டீக்கடை வைத்துள்ள இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இவருடைய இளைய மகள் (17) திருவண்ணாமலை ஆர்ப்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியை படித்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் பிளஸ் டூ முடித்த நிலையில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்வதற்கு விண்ணப்பித்திருந்தார். இதனிடையே அந்த இளம் பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுமலை திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.
அப்போது தன்னுடைய மகளின் காதல் விஷயம் அவருக்கு தெரியவர சிறுவயதில் காதல் வேண்டாம் கல்லூரியில் சேர்த்து விடுகிறேன் ஒழுங்காக படி என்று மகளுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தந்தை மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை மகளை அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த இளம் பெண், தன் காதலனுக்கு போன் செய்து வரச் சொல்லி நம் காதல் விஷயம் வீட்டில் தெரிந்து விட்டதால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று இளம் பெண் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பாற்ற வாலிபரும் கிணற்றில் குதித்த நிலையில் மகளைத் தேடி அங்கு வந்த ஏழுமலை இரண்டு பேரும் கிணற்றில் குதிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு அவர் கிணற்றில் குதித்து இரண்டு பேரையும் காப்பாற்ற முயன்ற நிலையில் ஏழுமலை அந்த வாலிபரை மட்டும் காப்பாற்றினார். அவரது மகள் கிணற்றில் குதித்த வேகத்தில் ஆழத்திற்கு சென்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…