“மனுஷனா நீ, ஒன்றரை வயது குழந்தையை துடி துடிக்க”… நள்ளிரவில் யமுனை ஆற்றில் தந்தை செய்த கொடூரம்… கண் விழித்த தாய்க்கு காத்திருந்த பேதிர்ச்சி…!

By Nanthini on தை 10, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், பெற்ற மகனையே தந்தை ஒருவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சௌரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பவர், தனது ஒன்றரை வயது மகன் கார்த்திக்கை நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது ரகசியமாகத் தூக்கிச் சென்றுள்ளார். ஊருக்கு அருகில் உள்ள யமுனை ஆற்றின் கரைக்குக் குழந்தையைக் கொண்டு சென்ற அவர், அங்கு இரக்கமின்றி குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, உடலை ஆற்றில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றார். மறுநாள் காலையில் கணவனையும் குழந்தையையும் காணாமல் துடித்த தாய் மற்றும் உறவினர்கள் தேடியபோது, ராஜேந்திரா தனது சொந்த கிராமத்திற்குச் சென்றது தெரியவந்தது.

உறவினர்கள் அவரிடம் பிடித்து விசாரித்தபோது, குழந்தையைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறை அவரை உடனடியாகக் கைது செய்தது. முதற்கட்ட விசாரணையில், ராஜேந்திரா மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே தனது இரண்டு மகள்கள் இறந்துவிட்டதால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அடிக்கடி குடும்பத்தையே கொன்றுவிடுவதாக மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது யமுனை ஆற்றில் குழந்தையின் உடலை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.