நள்ளிரவு நடந்த கொடூரம்…. “கோடாரியுடன் பாய்ந்த தந்தை!”… 9 மாதப் பிஞ்சு உயிர் துடிதுடிக்கப் பறிபோன சோகம்… போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்..!!!

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது 9 மாதக் குழந்தையைக் கோடாரியால் அடித்துக் கொன்ற தந்தையின் கொடூரச் செயல் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. ஷம்புத்யாயல் கோரி என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இன்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஷம்புத்யாயல் தனது மனைவியைக் கொலை செய்யும் நோக்கில் கோடாரியால் தாக்கியுள்ளார். இதில் அவரது மனைவி படுகாயமடைந்தார்.

மனைவியைத் தாக்கியும் ஆத்திரம் தணியாத ஷம்புத்யாயல், தான் பெற்ற குழந்தை என்றும் பாராமல், தொட்டிலில் இருந்த 9 மாதக் குழந்தையைக் கோடாரியால் வெட்டியுள்ளார். இதில் அந்தப் பச்சிளம் குழந்தை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட தந்தை ஷம்புத்யாயலை உடனடியாகக் கைது செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ஷம்புத்யாயல் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், குடும்பச் சண்டையில் பச்சிளம் குழந்தையைப் பலிகொடுத்த இச்சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய வாக்குவாதம் கொலையில் முடிந்து, ஒரு பச்சிளம் உயிர் பறிபோனது சுல்தான்பூர் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

2 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

8 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

10 minutes ago

“ஒரே ஒரு ரோடு ஷோ… மொத்த சென்னையும் தட்டிதூக்கிய விஜய்”… தலைநகரில் தலைகீழாக மாறும் தேர்தல் களம்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…

16 minutes ago

பயங்கரம்!.. 10 மாத குழந்தையுடன் மனைவியை உயிரோடு எரிக்க முயன்ற கணவன்… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியை உலுக்கிய கொடூரம்…!!!

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…

19 minutes ago

கார்ப்பரேட் உலகை உலுக்கிய “வேட்டை”… டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த கொடூரம்… நாசிக் பிபிஓ-வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…

24 minutes ago