“எனக்கு அவமானமா இருக்கு” வேறு சாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்த மகள்… வீட்டிற்கு வரவழைத்து தந்தை செய்த கொடூரம்…!!

By Soundarya on சித்திரை 5, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மாற்று சமூக இளைஞரைக் காதலித்த மகளைத் தந்தையே படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த சந்திர சீனு என்பவரது மகள் சவுடேஸ்வரி (22), தனது காதலன் நாகராஜுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய இருவரையும் பிடித்த போலீசார், சவுடேஸ்வரியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவருடன் மகள் சென்றது அவரது தந்தைக்குப் பெரும் அவமானமாகத் தோன்றியுள்ளது.

வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட சவுடேஸ்வரியைத் தந்தை சந்திர சீனு தலையணையால் முகத்தை அமுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், எவ்விதச் சலனமுமின்றி தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது தற்கொலை அல்ல, கொலை என்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குடும்ப கௌரவத்திற்காகத் தனது மகளைக் கொலை செய்ததை சந்திர சீனு ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.