“வாயில் மிளகாய் பொடி திணித்து…” எலும்புகளை உடைத்து 3 வயது பெண் குழந்தையை கொன்ற தந்தை…. உச்சகட்ட சித்திரவதை அனுபவித்த கொடூரம்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 22, 2026

Spread the love

அமெரிக்காவில், 3 வயதேயான அபிகைல் பென்னட் என்ற சிறுமி, தனது சொந்தத் தந்தை ஜஸ்டின் பென்னட் என்பவரால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு அக்குழந்தையின் விலா எலும்புகளும் முதுகெலும்பும் முறிக்கப்பட்டுள்ளன. இறுதியாக, தந்தை நடத்திய கொடூரத் தாக்குதலில் குழந்தையின் இதயம் வெடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

தண்டனையாகக் குழந்தையின் வாயில் காரமான மிளகாயைத் திணிக்கும் வீடியோ ஆதாரங்களும் கிடைத்துள்ளன. குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜஸ்டின் பென்னட்டுக்கு மரண தண்டனைக்கு பதிலாக 50 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கிட அரசுத் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குழந்தை சித்திரவதை குறித்து ஏற்கனவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், அக்குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனது பெரும் சோகத்தையும் உலகளவில் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.