“அவன் கூட போறதுக்கு, நீ செத்து தொல”… 21 வயது இளைஞன், 19 வயது மகள்… இரவோடு இரவாக கொன்று கிணற்றில் வீசிய கொடூர தந்தை.. ஒரு மாதத்திற்கு பிறகு மீட்கப்பட்ட அழுகிய உடல்….!

By Nanthini on பங்குனி 17, 2026

Spread the love

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கம்பாலா கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் நாதி, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் ராபிரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் எதிர்ப்பையும் மீறி இருவரும் தொடர்ந்து பழகி வந்ததால், இது கௌரவக் குறைச்சலை ஏற்படுத்தும் என்று கருதிய நாதியின் தந்தை, காதலர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, தனது மகள் வீட்டை விட்டு வெளியேறியபோது அவளைத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்ற தந்தை, நாதியும் நவீனும் சந்திக்கும் வரை மறைந்திருந்து காத்திருந்துள்ளார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, தனது மகனுடன் சேர்ந்து காதலர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கி படுகொலை செய்துள்ளார். பின்னர், இந்த கொலையை மறைப்பதற்காக இருவரது உடல்களையும் அருகில் இருந்த ஒரு விவசாயக் கிணற்றில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

   

குற்றச் செயலை மறைக்க நாதியின் தந்தையே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகளையும், அவரது காதலனையும் காணவில்லை என அவர் நாத்வா காவல் நிலையத்தில் நாடகமாடியுள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, பெண்ணின் குடும்பத்தினர் மீது சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மகள் வெளியே சென்றதும் தந்தை அவரைப் பின்தொடர்ந்து சென்றது உறுதி செய்யப்பட்டது.

   

தந்தையை பிடித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கௌரவத்திற்காக மகளையும் அவர் காதலனையும் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அழுகிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த கொடூரக் கொலைக்கு உடந்தையாக இருந்த நாதியின் தம்பி மற்றும் தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர். காதலித்த காரணத்திற்காக பெற்ற மகளையே தந்தை கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.