கணவன் வீட்டில் காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்… நேரில் சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… இரவோடு இரவாக நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் போர்ஜினி என்ற கிராமத்தை சேர்ந்த சஞ்சீவாணி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு அருகில் இருந்த கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்ற நபருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு லகான் பண்டாரே என்பவரை அந்தப் பெண் காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தனது காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார். திடீரென்று தனது காதலனை இரவில் தனது வீட்டிற்கு வரும்படி அந்தப் பெண் அழைப்பு விடுத்த நிலையில் உடனே காதலனும் காதலியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றுள்ளார். அவர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் இருந்தபோது கணவர் வீட்டார் அவர்களை பிடித்துக் கொண்டனர். உடனே அந்தப் பெண்ணின் தந்தைக்கு தகவல் கொடுத்த நிலையில் மகளின் வீட்டுக்கு தந்தை விரைந்து சென்றார்.

அங்கு தன் மகள் வேறொரு நபருடன் இருப்பதைக் கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் சேர்ந்து உறவினர்கள் அடித்து உதைத்த நிலையில் இரண்டு பேரையும் கை கால்களை கட்டி ஊருக்கு வெளியிலிருந்து ஆழமான கிணற்றில் தூக்கி போட்டு விட்டனர். அடுத்த நாள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிணற்றில் சடலமாக மிதந்த இருவரையும் மீட்டனர். மகளையும் அவரது காதலனையும் கொலை செய்தது தொடர்பாக சஞ்சீவாணியின் தந்தை, கணவர் மற்றும் உறவினர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

தவெக – அதிமுக கூட்டணி… இரவோடு இரவாக உறுதி செய்தார்… அரசியலில் அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவளிப்பது குறித்து எடப்பாடி…

2 minutes ago

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

10 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

10 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

10 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

10 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago