“இனிமேலும் அவ வரமாட்டா”… குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை… மனைவி சொன்ன ஒற்றை வார்த்தையால் துடிதுடிக்க பறிபோன 3 உயிர்…!

By Nanthini on கார்த்திகை 1, 2025

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராம்தம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (45) என்பவருக்கு பூங்கொடி (40) என்ற பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் கயல்விழி என்ற மகளும் 7 வயதில் ரிதக்ஷன் என்ற மகனும் உள்ளனர். இதனிடையே கிருஷ்ணனும் குடும்பத்துடன் சென்னையில் கூலி வேலை செய்து வந்த நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மனைவியை விட்டு தனிமையில் வசித்து வந்த கணவன் கிருஷ்ணன் தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து மூன்று பேரும் தீபாவளியை முன்னிட்டு தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

தீபாவளியை தனது குடும்பத்துடன் கொண்டாடிய கிருஷ்ணன் அவருடைய மனைவி வீட்டுக்கு சென்று, நம் குழந்தைகளின் எதிர்காலம் நினைத்தாவது நாம் சேர்ந்து வாழ வேண்டும் என்று பேசி உள்ளார். ஆனால் அதற்கு அவருடைய மனைவி எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் சென்னைக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த கிருஷ்ணன் நேற்று இரவு தன்னுடைய அண்ணன் வீட்டில் உணவருந்தி விட்டு தன் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார். அவருடைய குழந்தைகள் அண்ணன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வந்த கிருஷ்ணன் மகன் மற்றும் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

   

விடிந்ததும் நீண்ட நேரம் ஆகியும் யாரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது மூன்று பேரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

   

மேலும் இறப்பதற்கு முன்பு, கள்ளக்காதல் இருந்தால் வாழ்க்கை இதுதான் அவளுக்கு தண்டனை, எனது சொத்துக்களை மூன்று சவர நகைகளையும் ஏமாற்றிவிட்டால், அவளுடைய தாய் தந்தைக்கு தான் தண்டனை கொடுக்க வேண்டும் என நினைத்து, ஆனால் அந்த வீட்டில் இரண்டு குழந்தைகள் இருப்பதால் வேண்டாம். என் குழந்தைகள் மீது அவளுக்கு கொஞ்சம் கூட பாசம் இல்லை. அவளுடன் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை விட என்னுடன் இறந்து விடட்டும் என்று நினைத்தேன் என கிருஷ்ணன் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.