வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடைய மகன் இளங்கோவன் (45) பிஎச்டி படித்து முடித்துவிட்டு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இளங்கோவனுக்கு குடியாத்தம் அடுத்த மோடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வேலு என்பவருடைய மகளான இலக்கியா (35) என்பவருடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு இளங்கோ அவருடைய மனைவி இலக்கியா இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். அப்போது அவரது கணவர் குடும்பத்தினர் பண தேவைகள் இருப்பதாக கூறி இலக்கியாவின் நகைகளை வாங்கி தங்களிடம் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கூடுதலாக வரதட்சணை கேட்டுள்ளனர்.
திருமணம் ஆகி சில மாதங்களிலேயே கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இலக்கியா தன்னுடைய கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து வாழ்ந்து வந்துள்ளார். பிறகு தங்கம் நகரில் உள்ள தனது கணவரின் தந்தையான கோவிந்தராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் சென்று தன் கணவர் குறித்து விசாரித்த போது எந்தவித தகவலும் தெரிவிக்காமல் நகைகளையும் திருப்பித் தராமல் இருந்துள்ளனர்.
தொடர்ந்து இரண்டு வருடங்களாக மாமனார் கோவிந்தராஜிடம் தன்னுடைய கணவர் குறித்து கேட்டபோது, உன் புருஷன் உயிரோட இல்லை என்று உயிருடன் இருந்த மகன் இறந்து விட்டதாக பொய் சொல்லி உள்ளார். தன்னுடைய கணவர் வீட்டார் தனது நகைகளை வாங்கி வைத்துக் கொண்டு தன்னுடன் வாழாமல் இருப்பது குறித்து காவல் நிலையத்தில் இலக்கியா புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இளங்கோ தனது பெற்றோர் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இலக்கியா தன்னுடைய உறவினர்களுடன் சென்று இளங்கோவிடம் தனது நகைகள் குறித்து கேட்டபோது அவரும் உறவினர்களும் இலக்கியாவின் உறவினர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். உடனே இலக்கியா மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் கணவர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கணவர் இளங்கோ மற்றும் மாமனார் கோவிந்தராஜ் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து இளங்கோவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவருடைய தந்தையையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் பெயரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…