தற்போதைய சமூக வலைதளக் காலத்தில் பல சிறுவர்களும் இளைஞர்களும் தங்களது உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை ஒட்டுமொத்தக் குடும்பமுமே சுமக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இன்ஸ்டாகிராம் பயன்பாடு தொடர்பாகத் தந்தை ஒருவர் தனது மகளிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்குப் பெற்றோர்கள் கோபப்படுவது இயல்பு என்றாலும், அவர்களைத் திருத்த வன்முறையைக் கையில் எடுப்பது சரியான அணுகுமுறை அல்ல. அன்பும், பொறுமையும், ஆரோக்கியமான உரையாடலுமே பிள்ளைகளைச் சரியான பாதைக்குக் கொண்டு செல்ல உதவும். மேலும், இந்தச் சம்பவத்தின் போது தாய் வீடியோ பதிவு செய்த செயல் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இதுபோன்ற உணர்வுப்பூர்வமான குடும்பப் பிரச்சனைகளைச் சமூக வலைதளங்களில் பதிவிடாமல், அமைதியான முறையில் பேசித் தீர்ப்பதே சிறந்தது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
