ஸ்டேட்டஸ் வச்சது ஒரு குத்தமா.? “ஏன் உன் அம்மாவுக்கு மட்டும் தான் வைப்பியா.?” மனைவியை கணவன் செய்த கொடூரம்..!!!

By Soundarya on வைகாசி 18, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 26 வயதான யமுனா என்ற பெண், அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது தாயைப் பாராட்டி வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதைப் பார்த்த அவரது கணவன் பிரதீப் மற்றும் மாமியார் ஆகியோர், “உன் தாய்க்கு ஸ்டேட்டஸ் வைத்த நீ, ஏன் உன்னை வளர்க்கும் மாமியாருக்கு ஸ்டேட்டஸ் வைக்கவில்லை?” என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவனும் மாமியாரும் இணைந்து யமுனாவை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இந்த கொடூரத் தாக்குதலில் யமுனா பலத்த காயமடைந்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுள்ளார். குணமடைந்த பிறகு, தனக்கு நேர்ந்த இந்த குடும்ப வன்முறை மற்றும் அநீதி குறித்து கணவன் பிரதீப் மற்றும் மாமியார் மீது அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவர் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.