“அம்மா… அப்பா என்னை தொட்டு…” கதறிய 9 வயது மகள்… பெற்ற தந்தை செய்யுற காரியமா இது…? முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

சென்னை செங்குன்றம் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 31 வயது பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது 9 வயது மகள் தாயுடன் வசித்து வரும் நிலையில், தந்தை அவ்வப்போது மகளைப் பார்க்க வந்து வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் கொண்டு வந்து விடுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளைக் கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிச் சென்ற தந்தை, மறுநாள் மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டுள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த தாய் விசாரித்தபோது, “அப்பா தொட்டது எனக்குப் பிடிக்கவில்லை” எனக்கூறித் தந்தை தனக்குச் செய்த பாலியல் அத்துமீறல்களைக் கூறி அழுதுள்ளார்.

   

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த 36 வயது தந்தையைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரைக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.