வீட்டை விட்டு வெளியேறிய மகன்… கண்டுபிடித்தால் ₹15 லட்சம் பரிசு அறிவித்த தந்தை… CCTV-யில் சிக்கிய மர்மக் காட்சிகள்… அதிர்ச்சியில் குடும்பம்…!!

By Gayathri on ஆவணி 16, 2026

Spread the love

பிள்ளை பாசம் என்பது உலகில் விலைமதிப்பற்றது; ஒரு குழந்தையை இழந்து தவிக்கும் துயர நிலை எந்தவொரு பெற்றோருக்கும் வரக்கூடாது என இறைவனை வேண்டுவோம். கராச்சி நகரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தனது தந்தையுடன் ஏற்பட்ட சிறு கோபத்தின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி இன்றுடன் 45 நாட்கள் கடந்துவிட்டன. குழந்தையைக் காணாமல் அந்த குடும்பமே கண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில், திக்கற்ற அந்த தந்தை மனமுடைந்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், தனது மகனைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு அல்லது அவனது இருப்பிடத்தைக் கூறுபவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என நெஞ்சை உருக்கும் வகையில் அறிவித்துள்ளார்.

காணாமல் போன அந்தச் சிறுவனின் நடமாட்டம் சில இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், குழந்தை எங்கு இருக்கிறான் என்ற முழுமையான விவரம் இன்னும் கிடைக்கவில்லை. இந்த வேளையில், சக மனிதர்களாகவும், இறைநம்பிக்கையாளர்களாகவும் நமது தலையாய கடமை இந்தத் தகவலை சமூக வலைத்தளங்களில் இயன்றவரை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே ஆகும். இந்தச் செய்தியை நாம் பெருமளவில் பகிர்வதன் மூலம், விழிப்புணர்வு ஏற்பட்டு குழந்தை எங்கிருந்தாலும் விரைவில் மீட்கப்பட்டு அவனது குடும்பத்தினரிடம் பத்திரமாகச் சேர வழிவகை பிறக்கும்.