உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மகாகுன் மியூவூட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 23வது மாடியில் உள்ள பால்கனியில் பூஜைக்காக பூ பறித்துக் கொண்டிருந்தபோது, 11 வயது சிறுவன் ஆரவ் தவறி கீழே விழுந்தான்.
மகனைப் காப்பாற்ற முயன்ற அவனது தந்தை ரந்தீப் பத்ரா (40), நிலை தடுமாறி மகனுடன் சேர்ந்து 23வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
https://twitter.com/noidapolice/status/2116039304195748156/video/1
இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
