தீபாவளி நாளில் சோகம்…. இறைச்சி வாங்கப் போன தந்தை-மகன் கண் இமைக்கும் நேரத்தில் பலி…. கதறித் துடிக்கும் குடும்பம்….!

By Nanthini on கார்த்திகை 8, 2026

Spread the love

தீபாவளித் திருநாளைக் கொண்டாட அனைவரும் உற்சாகமாய் தயாராகி வந்த வேளையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே நேர்ந்த கோர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலூரைச் சேர்ந்த நவீன் என்பவர், தீபாவளிக்காக இறைச்சி வாங்குவதற்காக தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நவீன், அவரது தந்தை மற்றும் மற்றொரு நபர் என மூன்று பேரும் பலத்த காயங்களுடன் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

உடனே அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், தீவிர சிகிச்சைப் பலனின்றி மூன்று பேரின் உயிரும் பிரிந்தது. தீபாவளி பண்டிகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்தத் திடீர் விபத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கண்ணீரை வரவழைத்துள்ளதுடன், பண்டிகை நாளில் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.