“ஆண் நண்பருடன் வீடியோ…” குடும்ப மானமே போச்சு… 3 மாதமாக பிளான் போட்டு மகளை கொன்ற தந்தை, சகோதரன்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 10, 2026

Spread the love

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 22 வயது பெண் சோஃபியா, நிக்கி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் ஆண் நண்பருடன் அவர் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதால், ஆத்திரமடைந்த அவரது தந்தை முகமது ஃபாரூக் மற்றும் சகோதரர் முகமது ஹபில் ஆகியோர் குடும்ப மானம் போய்விட்டதாகக் கருதி அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர்.

கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு, பணிமுடிந்து வந்த சோஃபியாவை அண்ணன் ஹபில் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். சிசிடிவி கேமராக்கள் இல்லாத, இருட்டான பாதையைத் தேர்ந்தெடுத்து, உடன் எடுத்து வந்த சுத்தியலால் சோஃபியாவின் தலையில் பலமுறை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் சோஃபியாவின் உடலைச் சாலையோரம் வீசிவிட்டு, தானும் காயமடைந்து மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தி, இது ஏதோ அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடந்த விபத்து போல நாடகமாடியுள்ளார்.

   

ஆரம்பத்தில் இதனைச் சாலை விபத்தாகப் பதிவு செய்த போக்குவரத்துப் போலிசார், தீவிர விசாரணையில் ஹபிலின் கூற்றில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் இருப்பதையும், விபத்து நடந்ததற்கான எந்த ஆதாரமும் சம்பவ இடத்தில் இல்லை என்பதையும் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்தனர். இதையடுத்து போலிசார் நடத்திய அதிரடி விசாரணையில், தந்தையும் மகனும் சேர்ந்து 3 மாதங்களாகத் திட்டமிட்டு அரங்கேற்றிய ஆணவக் கொலை இதுவென்பது அம்பலமானது. தற்போது தந்தை ஃபாரூக் மற்றும் சகோதரன் ஹபில் இருவரையும் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.